பாடகி சுசித்ரா திடீரென மாயம்: கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

பாடகி சுசித்ரா திடீரென மாயம்: கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

1 mins read
eb723a1d-0ee4-44d8-8bae-22d2503a6731
-

சென்னை: பின்னணிப் பாடகி சுசித்ரா திடீரென மாயமாகி உள்ளார். அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக பிரபல திரையுலகப் புள்ளிகள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார் சுசித்ரா. இது தொடர்பாக சிலர் அவரைக் கடுமையாகக் கண்டித்தனர். சுசித்ராவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சுசித்ராவை அவரது கணவர் உட்பட யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.