சிபிராஜுக்கு ஜோடியான நிகிலா

சிபிராஜுக்கு ஜோடியான நிகிலா

1 mins read
714d792e-d6f8-43c4-b3ea-8dfa92308ef3
-

சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அறிமுகமாகி 'கிடாரி' படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும் மனதைக் கவரும் பாவனைகளாலும் ரசிகர்களின் மனம் கவந்தவர் நிகிலா விமல். இவர் அடுத்ததாக சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை வினோத் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குநர் துரையிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். பல விளம்பரங்க ளையும் இயக்கியுள்ளார். இதுவரை கிராமத்துப் பெண் ணாக நடித்து வந்த நிகிலா, இப்படத்தில் நகரத்தில் வாழக்கூடிய பெண்ணாக வருகிறாராம். அதுவும் அனிமேஷன் வேடம் எனக் கேள்வி. சமுதாயப் பிரச்சினையை மைய மாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.