செல்வராகவன்: சந்தானம் சிறந்த நடனக் கலைஞர்

செல்வராகவன்: சந்தானம் சிறந்த நடனக் கலைஞர்

1 mins read
ebb093bf-43c9-4564-999b-4a86596cd6b8
-

"சந்தானம் நல்ல நடிகர் மட்டு மல்ல; சிறந்த நடனக்கலைஞரும் கூட," என்று இயக்குநர் செல்வ ராகவன் பாராட்டி உள்ளார். நகைச்சுவை நடிகராக தமிழ்ச் சினிமாவில் வலம்வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார். பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் அவர், செல்வராகவன் இயக்கும் 'மன்னவன் வந்தானடி' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடி அதிதி போகங்கர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்துக்கு லோக நாதன் ஒளிப்பதிவை கவனிக் கிறார். இந்நிலையில், இப்படத்தில் சந்தானத்துக்கு அறிமுகப் பாடல் ஒன்றை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துக் கொடுத்துள்ளார். இந்தப் பாடல் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது.

'மன்னவன் வந்தானடி' படப்பிடிப்பில் சந்தானம், செல்வராகவன்.