'வெற்றிக்குப் படக்குழுவும் காரணம்'

'வெற்றிக்குப் படக்குழுவும் காரணம்'

1 mins read
62affe01-1fd6-4ed3-82c0-3b48701373d0
-

கதாநாயகர்களின் வெற்றிக்குப் அவர்கள் நடிக்கும் படத்தின் கதை மட்டுமல்ல, அதில் பணிபுரியும் படக்குழுவும் முக்கிய காரணமாவர்கள் என்று கூறியுள்ளார் ஜெயம் ரவி. "சில இயக்குநர்கள் நன்றாக கதை சொல்லுவார்கள். ஆனால் சொன் னதுபோல அவர்களால் படம் எடுக்கமுடியாது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. "முக்கியமாக படக்குழு நன்றாக அமையவேண்டும். தொழில் நுட்ப கலைஞர்கள் சரியாக அமையவில்லை என் றால், அந்தப் படம் சரியாக வராது. அந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் பலன் கிடைக்காமல் போய் விடும்.

"எனவே, நான் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்டாலும் அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கவனிப்பேன். அதில் எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அந்தப் படத்தில் நடிப்பேன். இல்லையென்றால் தவிர்த்து விடுவேன். "ஏனென்றால் ஒரு கதாநாயகனாக நான் திறமையைக் காட்ட வேண்டும் என்றால், நல்ல கதையுடன் நன்றாக பணியுரியும் படக்குழுவும் வேண்டும். இல்லையென்றால் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எல்லாமே வீணாகிவிடும்," என்றார்.