இணையம் வழி தாம் திரைப் படத்துறை குறித்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்ட தாக இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இவரது இயக்கத்தில் ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' திரைப்படம் 75 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இதற்கான வெற்றி விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்த படத்தில் பணியாற்றிய அனைவ ருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. "கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் 'நரகாசுரன்' படத்தை நானே தயாரிக்கிறேன்," என்றார் ரகுமான். "என்னுடைய பூர்வீகம் ஊட்டி. கோவையில் வசிக்கிறோம். நடுத் தரக் குடும்பம். சினிமா ஆசையில் சென்னை வந்தேன். "தொடக்கத்தில் 'ஜில் ஜங் ஜக்' சூரஜ் வைத்தியிடம் சில மாதங்கள் உதவி இயக்குநராக வேலை செய்தேன். பிறகு, இந்தக் கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடினேன். இருபத்தி யொரு வயது பையனான என்னை நம்பி சில கோடிகளை கொடுக்க யாரும் தயாராக இல்லை.
இணையம் வழி சினிமா கற்ற இளம் இயக்குநர்
1 mins read
-

