அருள்நிதிக்கு ஜோடி மகிமா

அருள்நிதிக்கு ஜோடி மகிமா

1 mins read
ad1acef4-7b09-4513-b280-2af6bca3167b
-

அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடி யாக 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்தில் மகிமா நம்பியார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அருண் விஜய், மகிமா நம்பியார் இணைந்து நடித்த 'குற்றம் 23' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகிமாவுக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. 'குற்றம் 23' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகிமா, படம் முழுக்க அழகிய தோற்றத்தில் வந்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். இதற்கு முன்பு நடித்த படங்களைவிட இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி இருந்தது. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் மகிமாவுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால், தனது அடுத்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு மகிமாவுக்கு கிடைத்துள்ளது. இதில் தாதி கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகிமா நம்பியார்