டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் படம் 'ஜெயிக்கிற குதிர'. கதாநாயகன் ஜீவன். ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவை சரளா, சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, மதன் பாப், ஏ.எல்.அழகப்பன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, பவர்ஸ்டார் உட்பட பலர் நடிக்கிறார்கள். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஷக்தி என்.சிதம்பரம். "ஒருவன் நல்லவனா கெட்டவனா என்றெல்லாம் இக்காலகட்டத்தில் யாரும் பார்ப்பதில்லை. வெல்லும் ஒருவனைத்தான் இந்த உலகம் மதிக்கிறது. இப்படிப்பட்ட ஓர் உலகில், வெற்றி நாயகனாக முன்னிலை வகிக்க, கதாநாயகன் என்ன செய்கிறார்? எந்த வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்கிறார்? எப்படி வெற்றி பெறுகிறார்? என்பதே படத்தின் கதை.
மூன்று நாயகிகளுடன் ஜீவன் நடிக்கும் 'ஜெயிக்கிற குதிரை'
1 mins read
-

