'ஒரு கிடாயின் கருணை மனு'

'ஒரு கிடாயின் கருணை மனு'

1 mins read
b91fd3b6-c09f-4317-8463-4b02c9671d0f
-

கிராமத்துப் பின்னணியில் உரு வாகி இருக்கும் நகைச்சுவைப் படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. 'ஈராஸ் இன்டர்நே ஷனல் மீடியா லிமிடெட்' நிறுவனம் தயா ரித்துள்ளது. இதில் நாயகனாக நடித்துள்ளார் விதார்த். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பின்னணிக் குரல் கலை ஞர் ரவீணா. இவர்களுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறு முகம் ஆகியோரும் நடிக்கிறார்கள். 'காக்காமுட்டை' பட இயக்குநர் மணிகண்டனிடம் உதவியாளராகப் பணியாற்றிய சுரேஷ் சங்கையா தான் இப்படத்தை இயக்கி உள்ளார். "மூன்று நாட்களில் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. கிராமத்துப் பின்னணியில் உருவாக்கி இருக்கிறோம். "ஒரு கிராமத்தில் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக ஒரு ஆடு பலியிடப்பட வேண்டும். அதற்காக ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப் போது நடைபெறும் சுவாரசியமான விஷயங்களை வைத்து கதை யோட்டத்தை அமைத்துள்ளோம்.

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் விதார்த், ரவீணா