சமுத்திரகனி இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு தம்மால் இயலாது என அவர் விளக்கம் அளித்துள்ளார். சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த 'அப்பா' திரைப்படத்தை அவர் மலையாளத்திலும் மறுபதிப்பு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. மலையாளத்தில் 'ஆகாச மிட்டாயீ' என்று பெயர் வைத்துள்ளனர். சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில், இப்படத்தில் இருந்து வரலட்சுமி திடீரென விலகியுள்ளதாகத் தெரிகிறது. தன்னுடைய இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்த ஜெயராம், சமுத்திரகனி ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
புதுப் படத்திலிருந்து விலகிய வரலட்சுமி
1 mins read
-

