வித்தியாசமான கதையில் அருள்நிதி

வித்தியாசமான கதையில் அருள்நிதி

1 mins read
0c34c70b-471f-40a6-a17f-a659d84d1be9
-

அருள்நிதி நடிப்பில் உருவாக உள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் படப்பிடிப்பை மார்ச் 31ஆம் தேதி தொடங்கவுள்ளார்கள். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிருந்தாவனம்' படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார் அருள்நிதி. அதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநரான மாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அருள்நிதி. ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளார். மகிமா நம்பியார் நாயகி. இப்படத்தில் ஆனந்த்ராஜ், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 31ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. "இது வித்தியாசமான கதையைக் கொண்ட படம். அதனால் மிகுந்த ஆவலுடன் நடிக்கிறேன். இது ரசிகர்களை நிச்சயம் கவரும்," என்கிறார் அருள்நிதி.