மீண்டும் நடிக்க வந்த மாளவிகா நாயர்

மீண்டும் நடிக்க வந்த மாளவிகா நாயர்

1 mins read
a1d5b534-388a-4c4d-818a-da5af31b3a9d
-

ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா நாயர். அவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது தனது கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் மாளவிகா, மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். அவினாஷ் ஹரிஹரன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில், 'அரசியல்ல இதெல்லாம் சாதாரண மப்பா' என்ற தமிழ்ப் படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகி உள்ளாராம். இதில் 'ராஜதந்திரம்' படத்தில் நடித்த வீரா நாயகனாக நடிக்கிறார். அரசியல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை, ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். கடந்த வாரம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.