ஒரு நடிகரின் வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமானதல்ல என்று 'கவண்' படத்திற்காக அளித்துள்ள பேட்டியில் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கவண்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நேற்று வெளியானது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, "நானும் ரவுடிதான் படத்தில் உங்கள் மகன் நடித்தார் தொடர்ந்து நடிப்பாரா?" என்று கேட்டதற்கு "ஒரு தந்தையாக அவரை நான் நன்றாக வளர்க்க வேண்டும். குழந்தைத் தனத்தை திரை ஆசையினால் தொலைத்துவிட வேண்டாம் என்று அவருக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர் ஒரு நடிகனாவதைவிட பள்ளி ஆசிரியராக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இந்த ஆசை நிறைவேறினால் உண்மையில் மகிழ்ச்சியடைவேன். தனது வாழ்க்கையை நிறைய ஓய்வு நேரத்துடன் அவர் அனுபவிக்கலாம்.
'என் மகனுக்கு என்னுடைய நிலை வேண்டாம்'
1 mins read
-

