தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது பல படங்களில் நடித்து முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். அவர் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் 'காளி' படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். ராதிகா சரத்குமார் தயாரிப்பில், சீனுவாசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் 'அண்ணாத்துரை' என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், தற்போது 'காளி' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்' மூலம் தானே தயாரிக்க இருப்பதாகவும், விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'காளி' படத்தில் விஜய் ஆண்டனி
1 mins read
-

