படப்பிடிப்புக்கு வந்த மலைப்பாம்பு; அலறிய கதாநாயகி

1 mins read
657f0844-b4ff-4019-a479-0fd16b979ea5
-

'அழகர்சாமியின் குதிரை' படத்தில் இரண் டாவது நாயகியாக நடித்தவர் அத்வைதா. அவர் தன் பெயரை கீர்த்தி ஷெட்டி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் நாயகியாக நடிக்கும் படம் 'செவிலி'. படத்தின் கதாநாயகன் அரவிந்த் ரோஷன். கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குபவர் ஆர்.ஏ.ஆனந்த். ஒளிப்பதிவாள ரும் இவரே. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர். "இது குடும்பத்திலுள்ள பாசப்பிணைப்பை விளக்கும் படம். தாய்ப் பாசத்துக்கு ஏங்கும் நாயகன், அதை சரியாகப் புரிந்து கொள்ளாத அவன் தாய். இதனால் நாயகன் மீது இரக்கப்பட்டு காதலிக்கிறாள் நாயகி. "ஆனால் அவர்களின் காதலுக்கு நாய கனே தடையாக மாறியதைக் கண்டு அவள் வேதனையில் மூழ்குகிறார். இப்படி மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.