மகிழ் திருமேனி இயக்கத்தில் 'குற்றம் 23'

மகிழ் திருமேனி இயக்கத்தில் 'குற்றம் 23'

1 mins read
a08ddef8-957f-40d4-9cd0-479234f5bc19
-

'தடையறத் தாக்க' படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்க உள்ள அடுத்த படத்தில் அருண் விஜய் மீண்டும் நடிக்க இருக்கிறார். அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'குற்றம் 23'. 'ரெதான் - தி சினிமா பீப்பிள்' சார்பாக இந்தர் குமார் இப்படத்தைத் தயாரித்திருந்தார். இந்நிலையில், அருண் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தை யும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ளார். இதை அருண் விஜய்யை வைத்து 'தடையறத் தாக்க' என்ற அதிரடிப் படத்தை அளித்திருந்த மகிழ் திருமேனி இயக்க இருக் கிறார். 'என்னை அறிந்தால்', 'குற்றம் 23' போன்ற படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த அருண் விஜய், இப்புதிய படத்தில் புதிய பரிமாணத்தில் தோன்ற உள்ளாராம்.