ஆர்யாவுக்கு நாயகியாக நடிப்பதென்றால் தனக்கு சம்பளமே வேண்டாம் என்கிறார் ஐஸ்வர்யா மேனன். ஐஸ்வர்யா மேனன் 'காதலில் சொதப்புவது எப்படி?' படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 'வீரா' படத்தில் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவருடைய நடிப்பைப் பலரும் பாராட்டினர். அதனால் தற்பொழுது முன்னணி நாயகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளைத் தேடி படவேட்டையில் இறங்கியிருக்கிறார். பல நடிகர்களைக் குறி வைத்திருக்கும் ஐஸ்வர்யா மேனனுக்கு ஆர்யாதான் முதல் நாயகன். காரணம் கல்லூரியில் படித்து வந்த காலத்தில் இருந்தே ஆர்யாவின் தீவிரமான ரசிகையாம் ஐஸ்வர்யா மேனன். அதனால் புதிய படங்களுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர், அடுத்தபடியாக ஆர்யாவை இயக்கும் இயக்குநர்கள் யார் யாரென்று தெரிந்துகொண்டு அவர்களிடம் வாய்ப்புக் கேட்டு அவர்களைத் துரத்தி வருகிறார். அதோடு ஆர்யாவுக்கு மட்டும் என்னை ஜோடியாக்கிவிட்டால் சம்பளமே வாங்காமல்கூட நடிக்கத் தயாராக இருக்கிறேன்," என்றும் அறிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.
'சம்பளமே வேண்டாம்; ஆர்யாதான் வேண்டும்'
1 mins read
-

