சேதுபதியுடன் ஜோடி சேரும் ஏமி

சேதுபதியுடன் ஜோடி சேரும் ஏமி

1 mins read
e690f2d2-32da-41e9-9a16-ac8f6d675c52
-

முதன் முறையாக விஜய் சேதுபதியும் ஏமி ஜாக்சனும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர். அப்புதிய படத்தை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்க உள்ளார். புதிய படத்துக்கு 'கஞ்சன் ஜங்கா' என்பதுதான் தலைப்பாம். கதைப்படி விஜய் சேதுபதியின் பெயர் ஜங்காவாம். படத்தில் இவர் யாருக்கும் எதுவும் கொடுக்காத மகா கஞ்சனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் ஐரோப்பாவில் நடத்தவுள்ளதாகத் தகவவல். முகேஷ் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.