மலைவாழ் மனிதன் வேடத்தில் ஆர்யா நடிக்கும் 'கடம்பன்'

1 mins read
a6d7b7d1-f0c7-4b7c-8609-397c2310c00d
-

'சூப்பர் குட் பிலிம்ஸ்' ஆர்.பி.சவுத்ரி, ஆர்யாவின் 'ஷோ பீப்பிள் பட நிறுவனங்கள்' இணைந்து தயாரிக்கும் படம் 'கடம்பன்'. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் மலைவாழ் மனிதனாக வரும் நாயகன் ஆர்யா கதாபாத்திரத்தின் பெயர் கடம்பன். நாயகி கேத்தரின் தெரசா கதாபாத்திரத்தின் பெயர் ரதி. தொடக்கத்தில் இப்படத்திற்கு 'தனிக்காட்டு ராஜா' என்று தலைப்பிட்டிருந்தனர். பின்னர் 'கடம்பன்' என்று மாற்றிவிட்டனர் படக்குழுவினர். யுகபாரதி பாடல் வரிகளில், யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் ராகவா. இப்படத்திற்கு விநியோகிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.