கீர்த்தி சுரேஷை நினைத்து பெருமை: விஜய்

கீர்த்தி சுரேஷை நினைத்து பெருமை: விஜய்

1 mins read
7ff6bf77-82aa-4cff-b06d-3740e6a7dbd1
-

கீர்த்தி சுரேஷை நினைத்து இயக்குர் விஜய் பெருமைப்படுகிறார். "இன்னைக்குப் பார்த்தீங்கன்னா கீர்த்தி மிகப்பெரிய வளர்ச்சி. அவங்க பண்ற படங்கள், அவங்களின் தேர்வு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு," என்று விஜய் சொன்னார். "கீர்த்திக்கு வெச்ச முதல் காட்சி எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு. அதை எடுத்த பிறகு 'கீர்த்தி நிச்சயம் சினிமாவுல பெரிய ஆளா வரப் போறீங்க'ன்னேன். 'அப்படியா சார்'னு ஆச்சர்யமா கேட்டாங்க.

"படப்பிடிப்பு பண்ணிட்டு இருக்கும்போது அப்பப்ப தட்டுக்கடையில கடலை வாங்கி சாப்பிடுவோம். 'இப்பதான் இங்கெல்லாம் வரமுடியும் அடுத்த வருஷம் பெரிய கதாநாயகியா ஆயிடுவீங்க'னு கிண்டல் பண்ணுவேன். அதற்கு அவர், 'சார் இப்பதான் நடிக்கவே ஆரம்பிச்சிருக்கேன். அதுக்கெல்லாம் இன்னும் வருஷங்கள் இருக்கு'ன்னாங்க" என்று விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியிருந்தார்.