தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துவிட வேண்டும் எனும் உத்வேகத்துடன் வலம் வருகிறார் கலையரசன். அவர் நடிக்கும் புதிய படம் 'எய்தவன்'. இதில் அவருடன் சாதனா டைட்டஸ் ஜோடி சேர்ந்துள்ளார். சக்தி ராஜசேகரன் இயக்கும் இப்படத்தை சுதாகரன் தயாரிக்கிறார். பார்தவ் பார்கோ எனும் புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். "இது வித்தியாசமான திரைக்கதை அமைப்பைக் கொண்ட படம்," என்கிறார்கள் படக்குழுவினர்.
கலையரசன் நடிக்கும் 'எய்தவன்'
1 mins read
-

