'வடசென்னை' படத்தில் இருந்து விலகிய அமலா பால்

'வடசென்னை' படத்தில் இருந்து விலகிய அமலா பால்

1 mins read
82d1640f-34e9-485b-97fe-a49118a6ab72
-

திருமண வாழ்க்கை முறிந்த பின்னர் அமலா பாலுக்கு அதிகம் கைகொடுத்தவர் தனுஷ் தான். அவருடன் தொடர்புடைய படங்களில் நடிக்க அமலாவுக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. அந்த வகையில்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'வடசென்னை' படத்தில் ஒப்பந்தமானார் அமலா பால். ஆனால் 'கால்‌ஷீட்' பிரச்சினையால் அப்படத்தில் இருந்து அமலா விலகி இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கிடையே, வெற்றிமாறனும் படம் தாமத மாவதற்கான காரணத்தை விவரித்துள்ளார். 'வடசென்னை' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு அப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதில் முதலில் நாயகியாக ஒப்பந்தமான சமந்தா விலகியதையடுத்து அமலாபால் நுழைந்தார்.

ஆனால், அவரும் தற்போது விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு கால்‌ஷீட் பிரச்சினையே காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ செய்தி இதுவரை வெளியாகாவிட்டாலும் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 'வட சென்னை' தாமதமாவது குறித்து இயக்குநர் வெற்றி மாறனும் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது 'விசாரணை' திரைப் படம் ஆஸ்கர் பரிந்துரைக்காகத் தயாராக வேண்டிய சூழ்நிலை இருந்தது என்றும், அதுவே 'வடசென்னை' தாமதமாகக் கார ணமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.