கலையரசனின் 'எய்தவன்

கலையரசனின் 'எய்தவன்

1 mins read
6cc7792c-de7f-4626-b79f-cdffb979910d
-

கலையரசன், சாத்னா டைட்டஸ் ஜோடி சேர்ந்துள்ள படம் 'எய்தவன்'. சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு பார்தவ் பார்கோ இசையமைக்கிறார். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்கிறார். இன்றைய சூழ்நிலையில் ஏழைகளுக்கு கல்வி என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முறையான கல்வியைப் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, சில நடைமுறைகளால் பாதிக்கப்படுவர்களை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர்.

"இப்படத்தில் கலையரசன், சாத்னா உட்பட மொத்தம் 16 முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள் ளன. அனைத்து கதாபாத்திரங்களுமே ரசிகர்களால் பேசப்படும் வகையில் அமைந்துள்ளன. கலை யரசனுக்கு இப்படம் சிறந்த அனுபவத்தையும் புகழையும் கொடுக்கும். அந்தளவுக்கு அவரது கதா பாத்திரம் சிறப்பாக, நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. "நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்துள்ள இப்படத்தில் நான்கு இனிய பாடல்கள் அமைந்துள்ளன. அவை ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கும்," என்கிறார் சக்தி ராஜசேகரன்.