மலேசியா சென்றுள்ள 'வேலைக்காரன்' படக்குழு

மலேசியா சென்றுள்ள 'வேலைக்காரன்' படக்குழு

1 mins read
4a1b9c80-4f4c-4f93-81c2-9647432a31ac
-

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'வேலைக்காரன்' படம் வேகமாக வளர்ந்துவருகிறது. இதில் சிவா வும் நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ளனர். அதனால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு விநியோகிப்பாளர்கள், ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள் ளது. இந்நிலையில், 'கபாலி' பாணியில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளா ராம் மோகன் ராஜா. இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் சென்னையில் படமாக் கப்பட்டுள்ள நிலையில், அடுத்து மலேசியா சென்றுள்ளது படக்குழு. அங்கு சுமார் 35 நாட்கள் படப் பிடிப்பை நடத்த உள்ளனராம். அங்குள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைக ளில் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இப்படத்தின் முக்கால் வாசி காட்சிகள் சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில், குடிசைப்பகுதி போன்ற பிரம்மாண்ட அரங்குகள் அமைக் கப்பட்டு படமாக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது. சமூகப் பிரச்சினையை மைய மாக வைத்து 'வேலைக்காரன்' உருவாகிவருகிறது. மலையாள நடிகர் பகத் பாசில் தமிழில் வில்ல னாக அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமையா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இப்படத்தின் முதல் சுவரொட்டி ஜுன் 5ஆம் தேதியும் படம் சரஸ்வதி பூசை விடுமுறை நாளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'வேலைக்காரன்' படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா.