கேத்தரின் தெரசா - இந்த அளவு சிரமப்பட்டதில்லை

கேத்தரின் தெரசா - இந்த அளவு சிரமப்பட்டதில்லை

1 mins read
79f83987-bf62-4fdf-8bb0-1e0e0ab636e8
-

முன்பு ஹன்சிகாவை ஆராதித்த தமிழ் ரசிகர்களின் பார்வை இப்போது கேத்தரின் தெரசா பக்கம் திரும்பி இருக்கிறது. அதற்கேற்ப அவரும் எழிலான தோற்றத்துடனும் கச்சிதமான உடல் வாகுடனும் வலம் வந்து அசத்துகிறார். அண்மையில் வெளியான 'கடம்பன்' படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார் கேத்தரின். அந்தப் படம் தொடர்பான அனுபவங்களைக் கேட் டால் அம்மணி வாயை மூட குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆகிறது. நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம் என் பது கேத்தரின் தெரசா விடாமல் வலியுறுத்தும் ஒரு கருத்து. அதற்கான காரணத்தையும் விவரிக்கிறார். "நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம்.

நான் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன். துரித உணவு வகைகளை சாப்பிடமாட்டேன். இனிப்புகளையும் தொடுவதில்லை. "இவ்வாறு கட்டுப்பாடாக இருந்தால்தான் உடல் அமைப்பு அழகாக இருக்கும். ரசிகர்களும் நம்மை ஆராதிப்பார்கள். பெண்கள் பல்வேறு ஆபத்து களில் இருந்து தற்காத்துக் கொள்ள நல்ல, கட்டுக் கோப்பான, வலிமையான உடல் அமைப்பு தேவை.