தொலைக்காட்சித் தொடரில் கார்த்திகா

தொலைக்காட்சித் தொடரில் கார்த்திகா

1 mins read
a06d7467-6528-4176-8dca-4352c9b0c4fc
-

அறிமுகமான புதிதில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. அதன் பிறகு கோடம்பாக்கம் பக்கம் அவரை அறவே காணமுடியவில்லை. இந்நிலையில், தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். அதிலும், 'பாகுபலி'யில் அனுஷ்கா நடித்த 'தேவசேனா' என்ற பெயரில் அமைந்த கதாபாத்திரத்தை ஏற்க உள்ளதாகக் கேள்வி. பாகுபலி கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் தற்போது இந்தி தொலைக்காட்சித் தொடர் ஒன்றுக்கு கதை, வசனம் எழுதி வருகிறார். அதில் வரும் கதாநாயகிக்கும் தேவசேனா என்றே பெயர் சூட்டியுள்ளாராம். அந்த கதாபாத்திரத்தில்தான் கார்த்திகா நடிக்க உள்ளார்.