சகலகலா வல்லவர் தனுஷ்

சகலகலா வல்லவர் தனுஷ்

1 mins read
6f3fe645-9fd1-4bb9-b4eb-6ecb7067043a
-

'பவர் பாண்டி' மூலம் தனு‌ஷுக்குள் இருக் கும் இயக்குநர் வெளிப்பட்டது முதல் அவருக்குப் பாராட்டுகளும் வாய்ப்பு களும் குவிந்து வருகின்றன. மருமக னின் படிப்படியான வளர்ச்சியை மாம னார் ரஜினியும் ரொம்ப மெச்சுகிறாராம். கதாநாயகனாக மட்டுமல்ல, நல்ல தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் கோடம்பாக்கத்தில் அழுத்தமாக ஒரு கோடு போட்டுவிட்டார் தனுஷ். சாதாரண வெற்றிக்கே மார்தட்டும் திரையுலகில் அசாத்தியமான வேலைகளைச் செய்துவிட்டு, அமைதியாக அடக்கமாக வலம் வரும் வித்தை தனு‌ஷுக்கு அத்துப்படி போலும். நடிப்பு, இயக்கம், தயா ரிப்பு, பட விநியோகம் என அசத்தும் தனுஷை, சகலகலா வல்லவர் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங் களில் மெச்சுகிறார்கள். இந்நிலையில், இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பிற மொழிகளி லும் அசத்தத் தொடங் கிவிட்டார் மனிதர். தனுஷ் நடித்த பல வெற்றிப் படங்களைத் தற்போது பிற மொழிகளிலும் பலர் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வருகின் றனர். அதனால் தென் னிந்தியாவில் அவரது ரசிகர் கூட்டம் பெருகி வருகிறது.