தமிழகத்தில் பிறந்த தம்மால் தமிழ்த் திரையுலகில் சாதிக்க முடியாதது வருத்தம் அளிப்பதாக இளம் நாயகி ரெஜினா கூறியுள்ளார். தற்போது 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் நடித்திருப்பவர், தனக்கான வெற்றி தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சமந்தாவைப் போலவே ரெஜினாவும் தமிழ்நாட்டில் பிறந்தவர். என்றாலும், தமிழைவிட தெலுங்கு படங்களிலேயே அதிகமாக நடித்து இருக்கிறார். "அண்மையில் வெளியான மாநகரம் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்து உதயநிதியுடன் ஒரு படத்தில் நடித்ததைப் பெருமையாக உணர்கிறேன். அவர் மிக எளிமையான மனிதர். அவருடைய நகைச்சுவை உணர்வு தனித்தன்மை கொண்டது. அவர் எதைச் சொன்னாலும் ஊக்கமளிப்பதாகவே இருக்கும்,. தமிழில் நிச்சயம் சாதிப்பேன்," என்கிறார் ரெஜினா.
தள்ளிப்போகும் ரெஜினாவின் வெற்றி
1 mins read
-

