சமந்தாவுக்கு குவியும் பாராட்டுகள்

சமந்தாவுக்கு குவியும் பாராட்டுகள்

1 mins read

எதிர்வரும் அக்டோபரில் சமந்தாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் திருமண வேலைகள், உற்சாகத்துக்கு மத்தியில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றிலும் கூட, ஏனோதானோவென நடித்துவிட்டுப் போகும் ரகமல்ல சமந்தா. எதிலும் முழுமையான ஈடுபாட்டை காட்டுவதாக அவரை வைத்துப் படமெடுப்பவர்கள் பாராட்டுகிறார்கள். தற்போது விஜய்யின் 61ஆவது படம் உள்ளிட்ட ஆறு படங்களில் நடித்து வரும் சமந்தா, தன் மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். மேலும், சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருக்கும் படத்துக்காக சிலம்பம் கற்று வருகிறார் அம்மணி. "ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க கடும் சிரமங்களைச் சந்திக்க தயாராக உள்ளேன். இதற்கு முன்பு சில படங்களில் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். விமர்சனங்கள் குறித்து கவலைப்படாமல் என் வேலையை சரியாக செய்ததாகவே கருதுகிறேன்," என்கிறார் சமந்தா.