'திருப்பதி சாமி குடும்பம்'

'திருப்பதி சாமி குடும்பம்'

1 mins read
311bcd01-215d-43ef-a5d5-0b936880d221
-

சுரேஷ் சண்முகம் இயக்கத்தில் ஜே.கே, ஜாகீன் கதாநாயகர்களாக அறிமுகமாகும் படம் 'திருப்பதி சாமி குடும்பம்'. ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து இதை தயாரிக்கின்றனர். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். இவர்களுடன் தேவதர்‌ஷினி, சிசர் மனோகர் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் சுரேஷ் சண்முகம். "ஒரு நடுத்தர குடும்பத் தலைவன் திருப்பதிசாமி, கால் டாக்சி ஓட்டுநர். அவர் தனது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். "இந்நிலையில் திருப்பதி சாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்தக் குடும்பத்தை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதே கதை. இது ரசிகர்கள் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் என்று நம்புகிறோம்," என்கிறார் சுரேஷ் சண்முகம்.