ராஜா குரலில் ஒலிக்கப் போகும் சிம்பு படப் பாடல்

ராஜா குரலில் ஒலிக்கப் போகும் சிம்பு படப் பாடல்

1 mins read
064f23d2-e659-4261-ab2e-f6ae7c0fbcd4
-

சிம்பு ரசிகர்கள் முன்னை விட உற்சாகமாக வலம் வருகிறார்கள். ஏனெனில் தொடர் தோல்விகள், சர்ச்சைகளில் சிக்கி வந்த அவர்களது அபிமான நாயகன் இப்போது நம்பிக்கையுடன் பல முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். போகட்டும், சிம்பு குறித்த அண்மைய தகவல் இது. மீண்டும் சிம்பு படத்தில் அவருக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளாராம் இளைய ராஜா. சிம்பு நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இதை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானாகான், நீது சந்திரா ஆகி யோர் நடிக்கின்றனர். சிம்புவுக்கு இப்படத்தில் நான்கு வெவ்வேறு விதமான தோற்றங்கள் என்பது தெரிந்த சங்கதிதான். அவரது கதாபாத் திரங்கள் குறித்து அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் ரசிகர் களை மேன்மேலும் உற்சாகப் படுத்துகின்றன.

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள் ளார். அவரது இசையில் இளைய ராஜா இந்தப் படத்துக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளாராம். இது சிம்புவுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருப்பதாகக் கேள்வி. 'ரோட்டுல வண்டி ஓடுது' என்ற அந்தப் பாடலை இளையராஜாவின் பிறந்தநாளான நாளை வெளியிட இருப்பதாகத் தகவல். ஏற்கெனவே சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தில் இளைய ராஜா 'மச்சான் மச்சான்' என்ற பாடலைப் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் ஒரு காட்சி.