கோடி கொடுத்தாலும் பேர் வாங்க முடியுமா எண்கிறார் ஐஸ்வர்யா ராஜே‌ஷ்

கோடி கொடுத்தாலும் பேர் வாங்க முடியுமா எண்கிறார் ஐஸ்வர்யா ராஜே‌ஷ்

2 mins read
dd23a7e8-212c-4ced-b2d8-4fd355c43149
-

'காக்கா முட்டை'க்குப் பிறகு ஐஸ்வர்யா ராஜே‌ஷுக்கு கோடம்பாக்கத்தில் தனி மதிப்பே வந்துவிட்டது. தினந்தோறும் புதுமுக இயக்குநர்களும் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களும் நல்ல கதைகளுடன் அவரை அணுகிய வண்ணம் உள்ளனர். வெற்றி நாயகி எனப் பெயர் எடுத்துவிட்டாலும்கூட, இன்றளவும் குறும்படங்களில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா தயங்குவதில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் குறும்படங்கள்தான் திறமைசாலிகளை அடையாளம் காட்டுவதாக உறுதியாக நம்புகிறாராம். சம்பளத்தை விட கதாபாத்திரமே முக்கியம் என்று குறிப்பிடும் அவர், ரசிகர்களின் பாராட்டு என்பது ஊதியத்தையும் விட மிக உயர்வானது என்கிறார்.

தற்போது தமிழில் தனுஷ், விக்ரம் படங் களில் நடித்து வருபவர், மலையாளத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகி யோருடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது சம்பளத்தை ஐஸ்வர்யா இதுவரை உயர்த்தவில்லை என்று வெளி யான தகவல் கோடம்பாக்க வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. "திரைத் துறையைச் சார்ந்த அனைவருக் குமே ஊதியம் என்பது மிக முக்கியம்தான். குறிப்பாக நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் என்பது ஒரு உற்சாக மருந்து எனலாம். "எனினும் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரம் என்பது அனைத்தையும் விட முக்கியமானது என்பது என் கருத்து. சிறந்த கதாபாத்திரங்கள்தான் நடிகர், நடிகைகளை உயரத்துக்கு கொண்டு செல்லும்.

"முன்பு 'காக்கா முட்டை' படத்தில் நான் நடித்த வேடம்தான் இதுவரை என்னைப் பற்றி பேச வைத்துக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் குறைவான சம்பளத்திற்குத்தான் நடித்தேன். ஆனால் நல்ல பெயர் கிடைத்தது. "கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் ரசிகர்கள் மனதை வென்றுவிட முடியாது. எனவே 'காக்கா முட்டை' வழி கிடைத்த நல்ல பெயர் என்பது விலைமதிப்பற்றது," என்கிறார் ஐஸ்வர்யா.

இன்று வரை சம்பளத்தை விட கதாபாத்தி ரங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பதாகச் சொல்பவர், தனது உயரம் என்ன என்பது தெளிவாகத் தெரியும் என்கிறார். எனவே தான் தனக்கென சில எல்லைகளை வகுத்துக் கொண்டு அதற்கேற்ப கதைகளைத் தேர்வு செய்வதாகவும் சம்பளத்தை நிர்ணயிப்பதாகவும் விளக்கம் அளிக்கிறார். ஐஸ்வர்யா தற்போது நடிக்கும் படத்தில், அவருக்கு முன்பாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகைக்கு கூடுதல் சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் இவருக்கோ குறைந்த சம்பளமே பேசியுள்ளனர். எனினும் இதுவரை அது குறித்துப் பேசாமல் ஒப்புக்கொண்டபடி அப்படத்தில் நடித்து வருவதாகச் சொல்கிறார்.