சமந்தா: உங்கள் ரசிகன் என்று கூறிக் கொள்வது அசிங்கமாக உள்ளது

சமந்தா: உங்கள் ரசிகன் என்று கூறிக் கொள்வது அசிங்கமாக உள்ளது

1 mins read
684c6a6e-c0ee-4b72-b177-bbcaa7ab4df5
-

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடை புகைப் படத்தை வெளியிட்ட சமந்தாவுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனது ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ள சமந்தா, படத்தின் கீழ் "சிறிய விடுமுறை கொண்டாட்டம்," எனக் குறிப்பிட்டுள்ளார். "உங்கள் ரசிகனாக இருப்பது எனக்கு அசிங்கமாக இருக்கிறது," என்று ஒருவர் கூறியுள்ளார். "நல்ல குடும்ப வாழ்க்கை வாய்த் துள்ளது. இதைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம். புகைப்படத்தை நீக்கிவிடுங்கள்," என கூறியுள்ளார்

மற்றொரு ரசிகர். இன்னொரு ரசிகர், "இன்றைய காலக்கட்டத்தில் சிலர் மாடலிங், டிரண்டிங், ஃபே ஷன் என்ற பெயரில் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் தவறான எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதற்கு 'லைக்', 'கமெண்ட்', 'ஷேர்' எதிர்பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த நாடு கெட்டுப்போவதற்கு இதுவும் காரணம்," என்று குறிப்பிட்டுள்ளார். "மனிதன் நல்லதை ஏற்க தாமதம் ஆகும். ஆனால் இதுபோன்ற ஆபாசங்கள் வேகமாகப் பகிரப்படும். எனவே இதுபோன்ற சர்ச்சைக்கு உள்ளாக வேண்டாம்," என விதவிதமாக ரசிகர்கள் சமந்தாவை விமர்சனம் செய்துள்ளனர்.