"பட்டங்கள் மீது விருப்பம் இல்லை. இளைய சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம்" என்று சிவகார்த்திகேயன் 'அதாகப்பட்டது மகா ஜனங்களே' என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசி உள்ளார். தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் பேசும் போது, "சிவகார்த்திகேயன் படங்களுக்கு குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. அவர் தமிழ்ப்பட உலகின் இளைய சூப்பர் ஸ்டார்," என்றார். நடிகர் எஸ்.வி.சேகர் முதல் தொடர்ந்து பேசிய பலரும் சிவ கார்த்திகேயனை 'இளைய சூப்பர் ஸ்டார்' என்றே அழைத்தனர். "எனக்கு எந்தப் பட்டமும் வேண்டாம். பட்டங்களில் எனக்கு விருப்பமில்லை. பட்டங்கள் பெயரை வாயால் சொல்வதற்குக் கூட நான் தயாராக இல்லை. தயவுசெய்து எனக்குப் பட்டப்பெயர் சூட்டி அழைக்காதீர்கள்," என்றார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன்: 'இளைய சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்'
1 mins read
-

