கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் புதிய படம் 'இவன் தந்திரன்'. கதாநாயகியாக நடிப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆர்.கண்ணன். "இது ஒரு திகில் படம். அதிரடிக் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் வேகமாக நகரும். அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வகையில் படம்பிடித்துள்ளோம். கவுதம் கார்த்திக் இதுவரை நடித்திராத கதாபாத்திரம் இது. படம் வெளியான பின் அவரது நடிப்பு பேசப்படும். அவருக்குப் புதிய வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கும் என நம்புகிறேன். ஆர்.ஜே.பாலாஜி தோன்றும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்," என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் 'இவன் தந்திரன்'
1 mins read
-

