இளமை பற்றி வதந்தி; கோபத்தில் காஜல்

இளமை பற்றி வதந்தி; கோபத்தில் காஜல்

2 mins read
6fa9c18e-b47f-4c4f-944b-18d6219c27bc
-

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என சுமார் 50 படங்களில் நடித்துவிட்டார். அவர் சினிமாவில் நடிக்க வந்து பத்து ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் அவர் நடிக்கத் தொடங்கியதில் இருந்து இப்போது வரை அவருக்கான ரசிகர் கூட்டம் அதிகரித்து கொண்டேதான் போகிறதே தவிர குறையவில்லை. தமிழில் எப்படி விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறாரோ, அதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர் களுடன் நடித்து வருகிறார். இப்போது 32 வயதை எட்டியுள்ள காஜல் அகர்வால், ஆரம்பத்தில் எப்படி இளமையாக சினிமாவில் நுழைந்தாரோ அதேபோல் இப்போது வரை இளமை யான தோற்றத்தோடு காணப்படுகிறார். ஆனால், காஜல் அகர்வாலின் இத்தகைய இளமைக்கு அவர் ரகசியமாகச் செய்துகொண்ட தோல் அறுவை சிகிச்சைதான் காரணம் என் றொரு செய்தி கோடம்பாக்க வட்டாரத்தில் பரவியுள்ளது.

இந்தச் செய்தி காஜல் அகர்வாலின் காதுக்குச் சென்றபோது மிகவும் கோபம் அடைந்த அவர் உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அதோடு, "இளமையைப் பாதுகாக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. "நான் எனது உடம்பை இளமை யாக வைத்திருக்க தேவையான உடற்பயிற்சிகள், உணவு முறை களைப் பின்பற்றி வருகிறேன். "அப்படி யார் செய்தாலும் அவர் கள் நீண்டகாலம் இளமையாக இருப்பார்கள். "அழகை மெருகேற்ற அறுவை சிகிச்சை அவசியம் இல்லை. சரியான உணவுமுறையைப் பின் பற்றி வந்தாலே போதும்," என்றார் காஜல். தற்போது அஜித்தின் 'விவேகம்' படத்தில் நடித்து முடித்துள்ள அவர் தெலுங்கில் ராணா வுடன் சேர்ந்து 'நேனே ராஜு நேனே மந்திரி' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர, அவர் விஜய்யின் நாயகியாக 'மெர்சல்' படத்திலும் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.