ஜூலை 21ஆம் தேதி வெளியாகிறது 'விக்ரம் வேதா'

ஜூலை 21ஆம் தேதி வெளியாகிறது 'விக்ரம் வேதா'

1 mins read
e2c77e71-1a69-4489-9666-44241e1e2d3a
-

மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. இப்படத்தை புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கி உள்ளனர். இவர்கள் ஏற்கெனவே 'ஓரம்போ', 'வா குவார்ட்டர் கட்டிங்' ஆகிய படங்களை இயக்கி உள்ளனர். 'விக்ரம் வேதா'வில் மாதவனுக்கு காவல்துறை அதிகாரி வேடம். ரவுடி கும்பலின் தலைவனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், பிரேம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 7ஆம் தேதி இப்படம் வெளியாக இருந்த நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் பட வெளியீடு தள்ளிப் போனது. தற்போது 21ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.