தனு‌ஷின் புதுப் படம் புரிந்துள்ள புது சாதனை

2 mins read
88071c69-4105-452f-9eec-35117c3579b8
-

'வேலையில்லா பட்டதாரி-2' புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் முன் னோட்டக் காட்சிகளை இது வரை ஏறத்தாழ 90 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். பொதுவாக ரஜினி, விஜய், அஜீத் ஆகியோர் நடிக்கும் படங்களின் முன்னோட்டக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தி யில் பெரும் வரவேற்பு கிட்டும். லட்சக்கணக்கானோர் அந்த முன் னோட்டத்தை ஒருசில நாட்களில் பார்த்து ரசிப்பது வழக்கம். தற்போது 'வேலையில்லா பட்டதாரி-2' படமும் அத்தகைய சாதனையைப் புரிந்துள்ளது. இப்படத்தை தனுஷ் தனது சொந்த நிறுவனம் மூலம் கலைப்புலி எஸ்.தாணுவுடன் இணைந்து தயாரிக்கிறார். அமலா பால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். வரும் 28ஆம் தேதி தனு‌ஷின் பிறந்த நாளையொட்டி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் கதை, வசனத்தை தனுஷ் எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக் கும் படம் இது.

இந்நிலையில் அண்மையில் இதன் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகின. இதையடுத்து இணையம் வழி இந்த முன் னோட்டத்தை இதுவரை 90.51 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். தனு‌ஷின் படத்தின் முன் னோட்டத்துக்கு இவ்வளவு அதிக மான பார்வையாளர்கள் இதுவரை இருந்ததில்லை. தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பின்னணி இசை சேர்ப்பு, குரல் பதிவு உள்ளிட்ட இதர பணிகள் நடக்கின்றன. இரண்டாம் பாகத்தை அடுத்து 'வேலையில்லா பட்டதாரி'யின் மூன்றாம் பாகமும் தயாராகிறது.

'வேலையில்லா பட்டதாரி-2' படப்பிடிப்பில் தனுஷ், கஜோல், ஐஸ்வர்யா.