முதல் படத்திலேயே ஆதி தனி முத்திரை

முதல் படத்திலேயே ஆதி தனி முத்திரை

1 mins read
18b6c89b-3fba-462e-a73e-59457786f2a5
-

'மீசைய முறுக்கு' படத்தில் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகிறார் ஆதி. கதாநாயகி விஜயலட்சுமி. இயக்கம், இசை, நடிப்பு என முக்கிய மூன்று துறைகளையும் கையில் எடுத்துள்ளார். இளைஞர்களின் கல்லூரி வாழ்க்கை, பெற்றோர்களின் கனவு, காதலை சுமக்கும் சாதி உள்ளிட்ட பல விஷயங்களையும் ஜாலியாக சொல்லியிருக்கிறார் ஆதி. அத்துடன் பல புதுமுகங்களுக்கும் வாய்ப்புகளையும் அளித்துள்ள 'மீசைய முறுக்கு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக முதல் படத்திலேயே இயக்குநராகவும் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார் ஆதி என்று சொல்கின்றனர். விஜய் சேதுபதி, விக்ரம் நடித்த 'விக்ரம் வேதா', ஆதி நடித்த 'மீசைய முறுக்கு' ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.