ரெஜினாவை முன்னிறுத்தி கோடம்பாக்கத்தில் களமிறங்கும் 'மகேந்திரா'

ரெஜினாவை முன்னிறுத்தி கோடம்பாக்கத்தில் களமிறங்கும் 'மகேந்திரா'

1 mins read
3cb12a14-6ed8-44dc-bafe-ed1ab246b67f
-

தற்போது தெலுங்குப் படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தெலுங்கில் வெற்றிபெற்ற 'ரா ரா கிருஷ்ணய்யா' என்ற படத்தை தற்போது 'மகேந்திரா' என்ற பெயரில் தமிழில் வெளியிடுகின்றனர். இதில் சந்தீப்கி‌‌ஷன், ரெஜினா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் ஜெகபதி பாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு ஆகியோரும் உள்ளனர். "தீயவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த நாயகன் சிறுவனாக இருந்தபோதே நல்லவனாக வாழ்கிறான். அவன் அவர்களைத் தன் வழிக்கு கொண்டு வர முயற்சிக்கிறான். இதில் யார் வெற்றிபெற்றனர் என்பது கதை. இது காதல், நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ளது," என்கிறார் இயக்குநர் மகேஷ் பாபு. ரெஜினாவுக்குத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருப்பதால், அவரை முன்னிலைப்படுத்தி இப்படத்துக்கு விளம்பரம் செய்ய உள்ளனராம்.