'நடிக்க வந்துவிட்டால் வெட்கத்தை மூட்டை கட்டிவிட வேண்டும்'

'நடிக்க வந்துவிட்டால் வெட்கத்தை மூட்டை கட்டிவிட வேண்டும்'

1 mins read
89ffd74e-e9f8-450d-a4dc-e5b399b9fc84
-

'அஞ்சலி' படத்தில் குழந்தை நட் சத்திரமாக நடிப்பைத் துவங்கி, 'கழுகு', 'யாமிருக்க பயமேன்', 'பண்டிகை' படங்களில் நடித் துள்ள நடிகர் கிருஷ்ணா, ஊட கங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். "சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையுடன் களமிறங்கி விட்ட பின்பு வெட்கப்பட்டால் காரியம் ஒன்றும் ஆகாது. அத னால் வெட்கத்தை எல்லாம் வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்து விட்டு வந்தால்தான் ஜெயிக்க முடியும். மற்றவர்களிடம் எதையும் கேட்க வெட்கப்படக் கூடாது. நானே நேரடியாகச் சென்று பலரிட மும் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டி ருக்கிறேன். "படப்பிடிப்பு இடைவேளையில் ஜாலியாக அரட்டை அடிப்பேன். படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பிவிடுவேன்.

மணிக்கணக் கில் நடிகைகளுடன் கைபேசியில் பேசுவது, அவர்களின் அறைக்குப் போய் தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் எல்லாம் ஈடுபட மாட்டேன். என்னுடன் நடிக்கும் எல்லா நாயகிகளுடனும் ஜாலியாகப் பேசிப் பழகுவேன். "அமெரிக்காவில் எம்.பி.ஏ., படித்தவன் நான். கைவசம் தொழில் இருப்பதால் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. என் கனவு நாயகி அனுஷ்காதான். ஆனால் பாகுபலிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஆரம்பத்தில் இருந்தே அனுஷ்காவின் தீவிர ரசிகன் நான். அவர்களின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்," என்கிறார் கிருஷ்ணா.