தயாரிப்பாளராக மாறிய விக்ரம் பிரபு

தயாரிப்பாளராக மாறிய விக்ரம் பிரபு

1 mins read
775e7c95-4d55-497f-aabb-61b64dae006e
-

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் 'நெருப்புடா'. "விறுவிறுப்பான திரைக்கதையுடன் நகரும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும். விக்ரம் பிரபுவுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும். தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் தந்துள்ளது. படத்தை செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்," என்கிறார் இப்படத்தை இயக்கும் புதுமுக இயக்குநர் அசோக் குமார். நாயகனாக மட்டுமல்லாமல், இசக்கி துரை, அஜய்குமார் ஆகியோருடன் இணைந்து இப்படத்தின் தயாரிப்புப் பணியையும் மேற்கொண்டுள்ளார் விக்ரம் பிரபு.