ஏற்றுமதியில் லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ.15 கோடி மோசடி: 3 பேர் மீது வழக்கு

ஏற்றுமதியில் லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ.15 கோடி மோசடி: 3 பேர் மீது வழக்கு

2 mins read

கோவை: ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி, தனியார் நிறுவனத்திடம் ரூ.15 கோடி மோசடி செய்த மூன்று பேரை போலிசார் கைது செய்துள்ளனர். கோவையைச் சேர்ந்த சிவகுமார் (45 வயது), ரமேஷ் கண்ணன் (40 வயது), வித்யாலட்சுமி (33 வயது) ஆகிய மூவரும் விகேஎஸ் ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இதில் அவர்க ளுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஈரோட்டைச் சேர்ந்த எஸ்கேஎம் என்ற நிறுவ னத்தை அணுகி உள்ளனர். கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை அளித்தால், நிதி நெருக்கடியில் இருந்து தங்களை மீட்டுக் கொள் வதுடன், எஸ்கேஎம் நிறுவனத் துக்கு லாபமும் ஈட்டித் தருவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய எஸ்கேஎம் நிறு வனத்தார், மூவருக்கும் உதவிக் கரம் நீட்டினர். இதையடுத்து சரக்குகளைப் பெற்ற விகேஎஸ் நிறுவனத்தார், தாங்கள் அளித்த வாக்குறுதியின்படி, எஸ்கேஎம் நிறுவனத்துக்கு முறையாக பணம் செலுத்தவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்கேஎம் நிறுவனத்தார், கணக்கு களை தணிக்கை செய்த போது, கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்த வகையில் சில கோடி வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட விகேஎஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மூவரும் தங்களுக் குள்ள கடன்களை அடைத்துவிட்டு நிறுவனத்தை எடுத்துக் கொள்ளு மாறு எஸ்கேஎம் நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

அதன்படி, ரூ.25 கோடி கடனை அடைத்து நிறுவனத்தைக் கைப்பற்றினர் எஸ்கேஎம் நிர்வாகத்தினர். ஆனால் நிறுவனத்தின் மீது இரு வங்கிகளில் ரூ.12.32 கோடி கடன் பெற்றதை விகேஎஸ் பங்குதாரர்கள் மறைத்துவிட்டது பிறகு தான் தெரிய வந்தது. இதையடுத்து ரூ.15 கோடி மோசடி செய்துவிட்டதாக சிவ குமார், ரமேஷ் கண்ணன், வித்யா லட்சுமி மீது எஸ்கேஎம் நிறுவனத் தார் புகார் அளித்துள்ளனர்.