சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாக தகவல் பரவியுள்ளது. இதையடுத்து அவரை இத்தகைய முடிவை எடுக்கத் தூண்டியதாக பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், அதை வழிநடத்தும் நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் அளித்த அந்தப் புகார் மனுவில், தங்களது தொலைக்காட்சிக்கான விளம்பரக் குறியீட்டு மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில் அந்த தனியார் தொலைக்காட்சியைச் சாடியுள்ளார்.
உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டினார்: நடிகர் கமல் மீது ஓவியா போலிசில் புகார்
1 mins read
-

