பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் புதிய படம் 'கிளம்பிட் டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. ரஜாக் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் 4500 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளனராம். மேலும், ஆறு இயக்குநர்களும் இந்தப் படத்தில் தங்களது நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் தவிக்கிறார்கள் நான்கு முதிய வர்கள். அவர்களுக்கு அதிக தொகைக்கு பெரிய வேலை ஒன்று கிடைக்கிறது. அந்தப் பணியைச் செய்து முடிக்க நான்கு இளையர்களின் உதவியை நாடுகிறார்கள். ஆனால் அந்த நால்வரும் முட்டாள்களாம். "இளையர்களின் முட்டாள்தன மான செயல்களால், நான்கு முதியவர்களும் சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் நிலை உருவாகிறது. இதனால் முதியவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள்.
"பாதிக்கப்பட்ட அவர்களை நான்கு இளையர்களும் மீட்டார் களா? என்பதே இப்படத்தின் கதை," என்கிறார் இயக்குநர் ரஜாக். இப்படத்தில் பாக்யராஜுக்கு காவல்துறை அதிகாரி வேடமாம். மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராக நடித்துள்ளார். 'பவர்ஸ்டார்' சீனிவாசனுக்கு அரசியல்வாதி வேடம். "முழுக்க முழுக்க நகைச் சுவையை மையப்படுத்தும் இப்படத் தில் திகில், அதிரடி, மர்மம் போன்ற இதர அம்சங்களும் உண்டு. பெரும்பாலான காட்சி களை மலைப்பகுதிகளில் படமாக்கி உள்ளோம். "பாக்யராஜ் தவிர, ஆர்.சுந்தர் ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன் சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் என ஆறு இயக்குனர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்," என்று பெருமிதத்துடன் சொல்கி றார் ரஜாக்.

