ராதிகா ஆப்தே: நடிகர்களுக்கு ஈடாக நடிகைகளுக்கும் சம்பளம் தரவேண்டும்

ராதிகா ஆப்தே: நடிகர்களுக்கு ஈடாக நடிகைகளுக்கும் சம்பளம் தரவேண்டும்

1 mins read
cb475796-505f-4b02-bdc7-82bec49c80bc
-
Google News Preferred Icon

'கபாலி' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதுடன் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றார் நடிகை ராதிகா ஆப்தே. ஒரு படத்தில் நடிகர் நடிகைகளுக்கு ஒரே மாதிரியான வேலைதான் உள்ளது என்றாலும் இந்தச் சமூகம் நடிகைகளை அவ்வளவு எளிதில் அங்கீகரிப்பது இல்லை என்று வருத்தப்பட்டு கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. அண்மையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் திரைத்துறையில் நடக்கும் சில விஷயங்களை பற்றி அவர் வெளிப்படையாக பேசியபோது, ஒரு படத்தில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஒரே மாதிரியான வேலைதான் உள்ளது. ஆனால் கதாநாயகர்களுக்கு மட்டும் கதாநாயகிகளை விட அதிகமாக பல கோடிகளில் சம்பளம் அளிக்கப்படுகிறது. நாயகன்களைப் போலவே நாயகிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கின்றனர். நேரத்துடன் வருகின்றனர். இயக்குநர் கூறுவதற்கேற்ப காட்சிகளில் நடிப்பதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். கதாநாயகிகளிலும் பல நல்ல நடிகைகள் உள்ளனர். ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்ள ரசிகர்களும் தயாராக இல்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையும் இப்படித்தான் உள்ளது என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.