விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்ய படாத பாடுபடும் கதாநாயகன்

விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்ய படாத பாடுபடும் கதாநாயகன்

1 mins read
18e613bc-6630-4310-b7d8-b1d1ad33d38c
-

வள்ளிகாந்த் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புதிய படம் 'செம்ம'. 'பசங்க' பாண்டிராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தில், அர்த்தனா பினு, யோகி பாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்றுள் ளனர். அண்மையில் இப்படத் தின் முன்னோட்டத்தை சூர்யா வெளியிட்டார். இதற்கு ரசிகர் கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். முதன்முறையாகக் கிராமப் பின்னணி கொண்ட கதையில் நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இவரது கதாபாத்திரத்தின் பெயர் குழந்தை வேலு. வள்ளி காந்தின் நண்பர் ஒருவரது திருமணத்தின்போது நடை பெற்ற சம்பவங்களே இப்படத் தின் கதையாக உருவெடுத் துள்ளது. மூன்று மாதங்களுக்குள் தாம் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஜோதிடர் ஒருவர் கூற, அதற்காக குழந்தை வேலு படும்பாட்டை நகைச்சுவையாக, விறுவிறுப்பாக விவரித்திருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர் வள்ளிகாந்த்.