யுவன் ஷங்கரின் பிறந்தநாளில் 'பலூன்' திரைப்படப் பாடல் வெளியீடு

யுவன் ஷங்கரின் பிறந்தநாளில் 'பலூன்' திரைப்படப் பாடல் வெளியீடு

1 mins read
2bb9378a-3e6e-4ed0-9de7-0391e5432e1e
-

புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பலூன்' படம் வருகிற சரஸ்வதி பூஜையை முன்னிட்டுத் திரைக்கு வர இருக்கிறது. காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஜெய் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஜெய்=அஞ்சலி கூட்டணியின் மூலம் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் உண்டாக்கிய இந்தக் கூட்டணி மற்றோர் பலமான கூட்டணியையும் அமைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு சுவாரஸ்யமான பாடலைப் பாடியுள்ளார். யுவன்-அனிருத் கூட்டணி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது. இப்படத்தின் 'மழை மேகம் நீயாட' என்ற பாடல் யுவனின் பிறந்தநாளான வரும் 31ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.