பொதுவாக நடிகைகள் மத்தியில் போட்டி, பொறாமை நிலவும் என்பார்கள். ஆனால் அண்மைக்காலமாக இந்த நிலை மாறி வருகிறது. இப்போதெல்லாம் நடிகைகள் ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வது, ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பதெல்லாம் சகஜமாகி வருகிறது. அந்த வகையில் மலையாள நடிகை சாய் பல்லவியின் நடிப்பைப் பாராட்டி உள்ளார் இளம் நாயகி ரகுல் பிரீத் சிங். அண்மையில் 'ஃபிடா' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இதில் அவரது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு நேரத்தில் சாய் பல்லவியைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார் ரகுல் பிரீத். அப்போது, "உங்கள் நடிப்பு பிரமாதம். என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டீர்கள்," என்று மனம்திறந்து பாராட்டினாராம்.
நள்ளிரவில் பாராட்டிய ரகுல் பிரீத் சிங்
1 mins read
-

