ஊரில் எங்கு திரும்பினாலும் ஓவியாவைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. எல்லாம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி செய்த மாயம். இந்நிலையில் ஓவியாவின் நல்ல குணத்தை வெளிப்படுத்தும் மற்றொரு தகவல் வந்திருக்கிறது. இவர் நடித்த 'சீனு' என்ற படத்தின் தலைப்பை இப்போது 'ஓவியாவை விட்டா யாரு சீனி' என்று மாற்றி உள்ளனர். இப்படத்தை மதுரை செல்வம் தயாரிக்க, ராஜதுரை என்பவர் இயக்கி இருந்தார். படம் முடிந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். பட வெளியீட்டுக்கு இயக்குநர் ஒத்துழைக்கவில்லையாம். இந்நிலையில் மதுரை செல்வத்தைத் தொடர்புகொண்ட ஓவியா, "அண்ணே எதற்கும் கவலைப்படாதீர்கள். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நான் நிச்சயம் கலந்துகொள்கிறேன். நீங்கள் நன்றாக வர வேண்டும்," என்று கூறினாராம். அதைக் கேட்டு நெகிழ்ந்துபோன தயாரிப்பாளர், பார்ப்பவர்கள் எல்லாம் ஓவியா புராணம் பாடி வருகிறாராம்.
ஓவியா புராணம் பாடும் தயாரிப்பாளர்
1 mins read
-

