மூத்த நடிகைகள் வழியில் தன்‌ஷிகா

மூத்த நடிகைகள் வழியில் தன்‌ஷிகா

1 mins read
abe50a72-295f-4d3d-a35d-0391f1416fb4
-

கதைக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் தரும் படங்களில் நடிப்பதையே பல முன்னணி நடிகைகள் விரும்புகின் றனர். திரிஷா, நயன்தாரா, மீண்டும் நடிக்க வந்துள்ள ஜோதிகா ஆகி யோரின் பட்டியலில் தற்போது தன்‌ஷி காவும் இடம்பிடித்துள்ளார். 'பரதேசி', 'கபாலி' உள்ளிட்ட படங்களில் தனக்கேற்ற சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த நடித்த தன்‌ஷிகாவும் இப்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்கிறார். இவர் நடிப்பில் உருவாகும் புதிய படம் 'குழலி'. இதன் முதல்தோற்றம் தற்போது வெளியாகி சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. "கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக திரையில் வெளிப்படுத்துபவர் தன்‌ஷிகா. இவர் மூத்த நடிகைகளான நயன்தாரா, திரிஷா வழியில் இப்போதே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது நல்ல விஷயம். இவரது நடிப்புத் திறமை மேலும் மெருகேறும்," என்று பாராட்டுகிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள். கதை நன்றாக இருக்க வேண்டும் என்பதில் கறாராக இருக்கும் தன்‌ஷிகா, சம்பள விஷயத்தில் அப்படி இல்லையாம். இதுவும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.